பதிவு செய்த நாள்
03
நவ
2014
12:11
ஆர்.கே.பேட்டை: எல்லையம்மன் கோவி லில், நவசக்தி மற்றும் அய்யப்பன் சிலைகள் பிரதிஷ்டை, நேற்று நடந்தது. ஆர்.கே.பேட்டை அடுத்த, ராஜாநகரம் கிராமத்தில் உள்ள எல்லையம்மன் கோவிலில், நேற்று நவசக்தியம்மன் பிரதிஷ்டை நடந்தது. இதற்கான யாகசாலை பூஜை மற்றும் புதிய சிலைகள் கரிகோலம், கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து மூன்று கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை 7:30 மணிக்கு, யாகசாலையில் இருந்து புனிதநீர் கலசங்கள், கோவில் கோபுரத்திற்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க கொண்டு செல்லப்பட்டன. 9:00 மணியளவில், கோபுர கலசங்களுக்கு, அபிஷேகமும், தொடர்ந்து, நவசக்தி அம்மனுக்கு அபிஷேகமும் செய்யப்பட்டது. இரவு 7:00 மணியளவில், எல்லையம்மன் வீதியுலா எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ராஜாநகரம் மேற்கு, கிழக்கு, ஆர்.கே.பேட்டை, நரசம்பேட்டை, நாராயணபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த திரளான பகுதிவாசிகள் கலந்து கொண்டனர்.