விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த ப.வில்லியனுர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருவோண நட்சத்தி ரத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மகா சிரவண தீபம் ஏற்றப்பட்டது. விழாவையொட்டி மூலவர் பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி உற்சவர் பெருமாளுக்கு விஷேச திருமஞ்சனம் நடந்தது. மூலவர் பெருமாளுக்கு அலங்காரம் செய்து சிறப்பு அலங்காரத்தில் கனகவள்ளி தாயாருடன் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 5 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி உற்சவர் பெருமாள் புஷ்பம், துளசியால் சிறப்பு அலங்காரத்தில் கருட கம்பத்தில் அருள்பாலித்தார். பின், மாலை 5.30 மணிக்கு மகா சிரவண தீபம் ஏற்றப்பட்டது.