சிவனின் வாகனமான நந்தி, சுவாமிக்கு எதிரில் மேற்கு நோக்கித்தான் இருக்கும். மேற்கு நோக்கி அமைந்த சிவாலயங்களில் நந்தி கிழக்கு பார்த்திருக்கும். ஆனால், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் கோயிலில் தெற்கு நோக்கிய நந்தியைக் காணலாம். இக்கோயிலின் பிரதான மூலவர் சத்தியகிரீஸ்வரர் ஆவார். இவர் கிழக்கு நோக்கி குடவறையில் காட்சி தருகிறார். இவருக்கு எதிரே பவளக்கனிவாய் பெருமாள் இருக்கிறார். எனவே நந்தி இவருக்கு எதிரில் அமைக்கப்படவில்லை. மேலும் இக்கோயிலில் உள்ள முருகன் வடக்கு நோக்கியிருப்பதால், பிரதான வாசலும் வடக்கு திசையில் இருக்கிறது. எனவே சிவனின் வாகனமான நந்தி, தெற்கு நோக்கி அமைக்கப்பட்டுவிட்டது. நந்தியின் அருகில் முருகனுக்குரிய மயிலும், விநாயகருக்குரிய மூஞ்சூறுவும் வாகனங்களால் அமைக்கப்பட்டிருக்கிறது.