ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே காட்டூரணியில் உள்ள தாயுமான சுவாமிகள் தவம் செய்து சித்தி பெற்ற இடத்தில் 300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட புளியமரம் உள்ளது. அதன் அடியில் தவம் செய்த நிலையில் மூலவரின் சிலை உள்ளது. இங்கு நாளை காலை 9:00 மணியளவில் பவுர்ணமி பூஜை நடக்கிறது. இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். பின்னர், தாயுமானவரின் பராபரக்கண்ணி, திருவாசம், சிவநாம அர்ச்சனைகள் ஆன்மிக சமய சொற்பொழிவுகள், அன்னதானம் நடைபெறும். ஏற்பாடுகளை தலைவர் ஆடிட்டர் சுந்தர்ராஜன், கொடிக்குளம் சத்தியமூர்த்தி செய்துள்ளனர்.