பதிவு செய்த நாள்
06
நவ
2014
12:11
புரசைவாக்கம்: தினமலர் செய்தி எதிரொலியாக, புரசைவாக்கம் கங்காதரேசுவரர் கோவிலில், இந்து அறநிலைய துறை இணை ஆணையர் பரஞ்சோதி ஆய்வு செய்தார். கங்காதரேசுவரர் கோவில் தெருவில் உள்ள, கங்காதரேசுவரர் கோவில் குளத்தில் தண்ணீர் தேங்காதது குறித்து, கடந்த சில நாட்களுக்கு முன், தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, நேற்று முன்தினம், கோவிலுக்கு வந்த அறநிலையத் துறை இணை ஆணையர் பரஞ்சோதி மற்றும் அதிகாரிகள், கோவில் குளத்தை பார்வையிட்டனர். கோவில் குளத்தில், தண்ணீர் ஊறும் இடத்தை சீர்செய்யவும், குளத்தின் பக்கவாட்டில் அமைந்துள்ள படிக்கட்டுகளில் உள்ள கற்களை அப்புறப்படுத்தவும் ஆணையர் உத்தரவிட்டார். மேலும், குளத்தில் புதிய கற்கள் அமைக்க, மதிப்பீடு செய்து உரிய நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு ஆணையர் அறிவுறுத்தினார். மேலும், குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, மாநக ராட்சிக்கு கடிதம் எழுதி அதை சரிசெய்யுமாறும், அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு, ஆணையர் உத்தரவிட்டார்.