பதிவு செய்த நாள்
08
நவ
2014
01:11
கும்பகோணம்: கும்பகோணம் பகுதியில் உள்ள சிவாலயங்களில், அன்னாபிஷேகம் நடந்தது. கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரன் கோவில், வியாழசோமேஸ்வரன்கோவில், காசிவிஸ்வநாதர் கோவில், அபிமுகேஸ்வரர் கோவில், கௌதமேஸ்வரர் கோவில், பாணபுரீஸ்வரர் கோவில், ஏகாம்பரேஸ்வரர் கோவில், கொட்டையூர் கோடீஸ்வரர் கோவில், கம்பட்ட விசுவநாதர் கோவில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில், திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோவில், பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவில் ஆகியவற்றில், ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடந்தது.
மண்ணச்சநல்லூர்: ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, மண்ணச்சநல்லூர் தாலுகாவில் உள்ள சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடந்தது. மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி கோவில், திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், கோபுரப்பட்டி மேத்தலீஸ்வரர் கோவில் ஆகிய சிவன் கோவில்களில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடந்தது. ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. துறையூர்: துறையூர் சிவாலயங்களில், ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேக விழா நடந்தது. துறையூர் சம்பத்கவுரி உடனுறை நந்திகேஸ்வரர் கோவிலில், கோ பூஜை, அபிஷேகத்துடன் வழிபாடு நடந்தது. மாலையில், 500 கிலோ அரிசி சாதம் மூலம் சிவபெருமானுக்கு அலங்காரம் செய்து வழிபட்டனர். துறையூர் பெரிய ஏரி கீழ்புறமுள்ள காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில், துறையூர் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரமேஸ்வரர் கோவில்களிலும் அன்னாபிஷேக விழா நடந்தது. துறையூர் அருகே உள்ள செங்காட்டுப்பட்டி, பெருமாள்பாளையம், சிங்களாந்தபுரம், சத்திரம், புலிவலம், திண்ணனூர், வெங்கடேசபுரம், எரகுடி, உப்பிலியபுரம், சோபனபுரம், கொப்பம்பட்டி உள்ளிட்ட ஊர்களில் உள்ள சிவாலயங்களில் அன்னாபிஷேக விழா நடந்தது.