பதிவு செய்த நாள்
10
நவ
2014
12:11
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அருகே முத்தாலம்மன் கோவிலில் நேற்று நடந்த கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். புதுச்சத்திரம் அடுத்த பெரியாண்டிக்குழி கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. அதையொட்டி கடந்த 7ம் தேதி விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், முதல் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து 8ம் தேதி இரண்டாம் கால யாக சாலை பூஜை, மூலமந்திர ஹோமம், தீபாராதனை நடந்தது.
மூன்றாம் கால யாக பூஜை, யாத்ராதானம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல், பூர்ணாகுதி நடந்தது. நேற்று விஷேச சாந்தி, நான்காம் கால யாக பூஜை, கோ பூஜை, பிம்பசுத்தி, நாடிசந்தானம், தத்வார்ச்சனை, மூலமந்திர ஹோமம் நடந்து, கடம் புறம்படாகி காலை 10:15 மணிக்கு கும்பாபிஷேகம் நடந் தது. கும்பாபிஷேகத்தில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம நிர்வாகிகள் செய்திருந்தனர்.