புதுச்சேரி: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, மொரட்டாண்டி சனீஸ்வரன் கோவிலில் சொர்ண சிதம்பர மகா கணபதிக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் சனீஸ்வர பகவான் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அமைந்துள்ள சொர்ண மகா கணபதிக்கு, சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று 1008 கொழுக்கட்டை படையல், விசேஷ ஹோமம் மற்றும் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சஹஸ்ரநாம அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை சிதம்பர குருக்கள், கீதாராம குருக்கள், கீதா சங்கர குருக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.