தாண்டிக்குடி: தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது.சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன. பக்தர்கள் தேங்காய் மற்றும் மிளகு தீபங்கள் ஏற்றி வழிபட்டனர். வடை மாலை சாத்தப்பட்ட நிலையில் கால பைரவர் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.