திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் பைரவாஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது. யோக பைரவர் சன்னதியில் யாகசாலை மண்டபத்தில் ரமேஷ் குருக்கள் தலைமையில் சிவாச்சார்யார்கள் 11 புனித நீர் கலசங்களுடன் யாகவேள்வி வளர்த்து வேதங்கள் முழங்கினர். தொடர்ந்து புனித நீரால் மூலவர் பைரவருக்கு அபிஷேக,ஆராதனை நடந்தது. அடுத்து சந்தனக்காப்பில் வெள்ளி அங்கி அணிந்து பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.