பதிவு செய்த நாள்
15
நவ
2014
12:11
திருப்பூர் ; திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா ஏற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் அ<லுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். சப்-கலெக்டர் செந்தில்ராஜ், இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் ஆனந்தன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் ஆனந்தன் பேசியதாவது: வரும் டிச., 1ம் தேதி காலை 9.00 முதல் 10.30 மணிக்குள் நடக்கும், ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்துக்கு, பல்வேறு மாவட்ட மக்கள் வருவர். எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில், பாதுகாப்பு பணிக்கு கூடுதல் போலீசார் நியமிக்க வேண்டும். நகரின் மையத்தில் கோவில் உள்ளதால், வாக னங்கள் அதிகமாக வரும்போது நெரிசல் ஏற்படும். போக்குவரத்து மாற்றம் செய்யவும், வாகனங்களை நிறுத்தவும் வழிவகை செய்ய வேண்டும். மாநகராட்சி அதிகாரிகள் சிறப்பு கவனம் எடுத்து, கோவில் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். போதிய மின் விளக்கு மற்றும் குடிநீர் வசதி செய்ய வேண்டும். திருப்பணி முடிந்ததும், தேவையற்ற பொருட்களை அகற்ற, இந்து சமய அறநிலையத்துறை துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தர்கள் வசதிக்காக, அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ் இயக்க வேண்டும். தேவையான மருந்து, மாத்திரைகளுடன், ஆம்புலன்ஸ் நிறுத்த வேண்டும். தீயணைப்புத்துறையும், மின்வாரியமும் எந்நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும். கோவில் சுற்றுப்பகுதிகளில் உள்ள மின்கம்பங்கள், தெருவிளக்குகளை தணிக்கை செய்து பராமரிக்க வேண்டும், என்றார்.