பதிவு செய்த நாள்
17
நவ
2014
11:11
மயிலாடுதுறை: கங்காதேவி முதலான அனைத்து நதிகளும் தங்களின் பாவச்சுமைகள் நீங்க வழிசெய்யுமாறு சிவபெரு மானிடம் வேண்டிய போது பாவங்களை போக்க ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை காவிரி நதி யில் நீராடினால் உங்கள் பாவச்சுமைகள் குறையும் என்று சிவபெருமான் வரமளித்தார்.அதன்படி மயில õடுதுறை காவிரியில் ஐப்பசி 30 நாட்களும் புதிய நீராடினால் அனைவரின் பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
அதனால் காசிக்கு இணையான தலமாக மயிலாடுதுறை விளங்கிவருகிறது.இத்தகைய பெருø ம மிக்க துலா உற்சவம் மயிலாடுதுறையில் ஆண்டு ÷ தாறும் ஐப்பசிமாதம் 30 நாட்களுக்கும் கொண்டா டப்படுகிறது. அதேபோல் இவ்வாண்டு கடந்த அக்டோபர் 18ம் தேதி ஐப்பசி (துலா மாதம் )மாதம் பிற ப்பு தீர்த்தவாரி நடந்தது. அதனை தொடர்ந்து முக்கிய விழாவான அமாவாசை தீர்த்தவாரி நடந்தது.அத னை தொடர்ந்து கடந்த 7ம் தேதி திரு க்கொடியேற்றத்துடன் கடைசி 10 நாள் உற்சவம் தொடங்கியது.மு க்கிய திருவிழாவாக 13ம் தேதி திருக்கல்யாணமும், 15ம் தேதி திருத்தே÷ ராட்டமும் நடந்தது. ஐப்பசி 30 ம் தேதியான நேற்று கடைமுக தீர்த்தவாரி நிகழ்ச்சிநடந்தது.அதனை முன்னிட்டு அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி, ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர், மேதாதட்சிணாமூர்த்தி சுவாமி, விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர், அறம்வளர்த்தநாயகி சமேத அய்யாறப்பர் சுவாமி, காசிவிஸ்வநாதர் சுவாமி ஆ கிய ஐந்துசுவாமிகளும் சிறப்பு அலங்காரத்தில் காவிரி துலாக்கட்டத்தில் இருகரைகளிலும் எழுந் தருளி ன. மதியம் 2.30 மணியளவில் காவிரிக்கரையில் அஸ்திரதேவருக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப் பட்டு சுவாமி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு பூஜையை சுவாமிநாத சிவாச்சாரியார் தø லமையிலானோர் செய்துவைத்தனர்.இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ங்களில் இருந்து பல ஆயி ரக்கணக்கான பக்தர்கள் புனிதநீராடி சுவாமியை வழிபட்டுசென்றனர்.இதில் திருவாவடுதுறை ஆதீனம் சுந்தரமூர்த்தி தம்பி ரான் சுவாமிகள், அம்பலவாணதம்பிரான் சுவாமிகள், சுப்ரமணி யதம்பிரான் சுவாமி கள், நீதிபதி தங்கமணிகணேசன், பாஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன்,வக்கீல் ராஜேந்திரன்,எம்.எல்.ஏ.அருட்செல்வன், நகராட்சி தலைவி பவானி,போலீஸ் கமிஷ்னர் ராமகிருஷ்ண ன், உட்பட நகர முக்கிய பிரமுகர்கள், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.