பதிவு செய்த நாள்
17
நவ
2014
11:11
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருவிழந்தூரில் 108 திவ்யதேசயங்களில் ஒன்றாக விளங்கக் கூடிய பரிமளரங்கநாதர் கோயில் உள்ளது.இங்கு ஆண்டுதோறும் புரட்டாசிமாத உற்சவம், வைகுண்ட ஏகாதேசி விழா மற்றும் ஐப்பசி மாதம் துலா உற்சவம் ஆகியவை சிறப் பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதேபோல் இவ்வாண்டு நேற்று கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு திருத்தேரோட்டமும், தீர்த் தவாரி நிகழ்ச்சியும் நடந்தது. இதனை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத பரிமளரங்கநா தன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத பரிமளரங்கநாதர் திருத்தேருக்கு எழுந்தருளினார். அறநிலையத்துறை இணை ஆ ணையர் ஜெகநாதன், துணை ஆணையர் கஜேந்திரன், உதவி ஆணையர் சாத்தையன், கோயில் செயல் அலுவலர் சுரேஷ் மற்றும் பக்தர்கள் வடம் பிடிக்க திருத்தேரோட்டம் நடைபெற்றது. கோயிலின் நான் கு வீதிகள் வழியாக சென்று நிலையை அடைந்தது. தொடர்ந்து பரிமளரங்கநாதர் பெருமாள் காவிரிக் கரைக்கு எழுந்தருளி தீர்த்தம்கொடுத்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.