பதிவு செய்த நாள்
18
நவ
2014
02:11
திருவள்ளூர்: கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு, அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல, மாலை அணிந்தனர். கார்த்திகை முதல் தேதியன்று, அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து, சபரிமலை செல்வது வழக்கம். நேற்று, கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு, திருவள்ளூரில் பக்தர்கள் அதிகாலையிலேயே குளித்து, காவி மற்றும் கருப்பு ஆடை அணிந்து, அருகில் உள்ள விநாயகர் மற்றும் அய்யப்பன் கோவில் களுக்குச் சென்றனர். அங்கு, குருசாமியிடம் பக்தியுடன் மாலை அணிந்த பின், சுவாமியை வழிபட்டனர். இதனால், கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. நகரி: கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு, ஆந்திராவில், நேற்று திரளான பக்தர்கள் மாலை அணிவதற்காக, கோவில்களில் கூட்டம் கூட்டமாக குவிந்தனர். சித்துார் மாவட்டம், நகரி கரக்கண்டேஸ்வர சுவாமி கோவில், தேசம்மாள் கோவில், காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில், நாராயணவனம் சதாசிவா கோவில் உட்பட பல பகுதிகளில் உள்ள கோவில்களில், நேற்று அதிகாலை முதல், பக்தர்கள் அய்யப்ப சுவாமி மாலை அணிய குவிந்தனர்.