திண்டிவனம்: திண்டிவனம் ஆர்ய வைசிய மகிளா விபாக் மற்றும் வாசவி கிளப் வனிதா சார்பில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு நெல்லிச் செடி பூஜை நடந்தது. திண்டிவனம் கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தானத்தில் நடந்த பூஜையில் நெல்லிமரம் விஷ்ணுவாகவும், துளசிச் செடி மகாலட் சுமியாகவும் விசேஷ பூஜை நடந்தது. கணபதி, கலச பூஜைகள், வெங்கடேஸ்வரா சகஸ்ர நாம அர்ச்சனை, துளசி, கவுரி, மகாலட்சுமி அஷ்டோத்தி ரங்கள் பாராயணம் செய்யபட்டது. மங்கல பொருட்கள் தாம்பூலம் வழங்கபட்டது. பாக்யலட்சுமி அம்மாள் தலைமையில் மகிளா விபாக் தலைவி மகேஸ்வரி, வாசவிகிளப் தலைவர் சங்கர், செயலர் பிரபாகரன், வனிதா கிளப் தலைவர் சாந்தி பாபுரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.