பதிவு செய்த நாள்
27
நவ
2014
12:11
திட்டக்குடி: சபரிமலை பக்தர்கள் தொண்டிற்கு திட்டக்குடி, சேப்பாக்கம், வேப்பூர் பகுதியைச் சேர்ந்த 60 ஐயப்ப பக்தர்கள் ராமநத்தத்திலிருந்து புறப்பட்டனர்.கடலூர் மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சபரிமலை தொண்டுக்காக திட்டக்குடி, சேப்பாக்கம், வேப்பூர் பகுதியிலிருந்து 60 பக்தர்கள் புறப்படும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி ராமநத்தம் பகுதியில் சிறப்பு பூஜை நடந்தது.
அகில பாரத ஜப்ப சேவா சங்க கடலூர் மாவட்ட துணைத் தலைவர் திட்டக்குடி தங்கராசு, ராமமூர்த்தி தலைமையில் நீலாராம் ரமேஷ், தொண்டரணி படை கண்காணிப்பாளர் சரவணன், தங்கதுரை, சீனுவாசன் உட்பட 60 பக்தர்கள் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றனர்.
இதையடுத்து திட்டக்குடி, சேப்பாக்கம், வேப்பூர் பகுதிகளைச் சேர்ந்த 60 பேர் சபரிமலை தொண்டிற்காக புறப்பட்டு சென்றனர். அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் நிர்வாகிகள், பக்தர்களை வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.