திண்டிவனம்: பெருமுக்கல் மலை மீது ஏற்றப்படும் மகாதீப செப்பு கொப்பரை சீரமைக்கும் பணி நடந்தது. திண்டிவனம் மரக்காணம் ரோட்டில் பெருமுக்கல் சஞ்சீவிமலை மீது ஞானாம்பிகை சமேத முக்தியாஜல ஈஸ்வரர் கோவில் உள்ளது. இந்த மலைமீது வரும் 5 ம் தேதி மாலை 6 மணிக்கு, 7 அடி உயர செப்பு கொப்பரையில் 1008 லிட்டர் நெய் கொண்டு மகா கார்த்திகை தீபம் ஏற்றும் விழா நடக்கவுள்ளது. இதை முன்னிட்டு தீப கொப்பரையை சீரமைத்து, பெயின்ட் அடிக்கும் பணி நடந்து வருகிறது. விழா ஏற்பாடுகளை பெருமுக்கல் கிராம மக்கள், சிவனடியார் திருக்கூட்டம், திருவான்மிகை ஈஸ்வர முடையார் சிவராத்திரி உழவார பணிக்குழுவினர் செய்து வருகிறார்கள்.