சபரிமலை சீசன் எதிரொலி ஸ்ரீவி.,க்கு பக்தர்கள் வருகை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27நவ 2014 01:11
ஸ்ரீவில்லிபுத்தூர்சபரி மலை சீசன் எதிரொலியால் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் அடிப்படை வசதிகளின்றி தவிக்கின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் புகழ்பெற்ற புண்ணியதலமாக விளங்குவதால் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
தற்போது சபரிமலை சீசன் என்பதால் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பக்தர்களின் எண்ணிக்கைக்கேற்ப அடிப்படை வசதிகள் இல்லை.இங்கு வரும் பயணிகளுக்கு கழிப்பறை வசதி நகராட்சி சார்பில் செய்து கொடுக்கப்படவில்லை. ஆண்டாள் கோயில் நிர்வாகத்தின் சார்பில் வடக்கு மாடவீதி, கீழ ரதவீதிகளில் கழிப்பறை வசதிகள் உள்ளது. இந்த கழிப்பறையும் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்படுகிறது.
இரவு, அதிகாலையில் வரும் பக்தர்கள் கழிப்பறை வசதியின்றி சிரமமப்படுகின்றனர். நகராட்சி சார்பில் குளிக்கும் வசதிகள் எதுவும் செய்யாதது ஐயப்ப பக்தர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. சனி, ஞாயிறு கிழமைகளில் அதிகளவில் பக்தர்கள் வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
இவர்கள் ரோட்டின் ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி கடைகளுக்கு சென்று விடுகின்றனர். போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க கூடுதல் போக்குவரத்து போலீசார் நியமித்து வாகனங்கள் சிரமமின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.