பதிவு செய்த நாள்
29
நவ
2014
12:11
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், என்.ஜி.ஜி.ஓ., நகர் சக்தி விநாயகர் கோவிலில் திருப்பணி துவக்கத்தை முன்னிட்டு பாலாலய பூஜை நடந்தது. திருக்கோவிலூர், என்.ஜி. ஜி.ஓ., நகரில் உள்ள சக்தி விநாயகர் கோவில் வளாகத்தில் மாரியம்மன் கோவில் புதிதாக கட்டப்படுகிறது. சக்தி விநாயகர் கோவிலுக்கும் கும்பாபிஷேகம் நடத்த பணிகள் நடந்து வருகிறது. நேற்று காலை விக்னேஸ்வரபூஜை, கடஸ்தாபனம், பரிவாரமூர்த்திகள் ஹோமம், தீபாராதனை நடந்தது. சக்தி விநாயகர், ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி, துர்க்கையம்மன், பாலமுருகன் உள்ளிட்ட மூர்த்திகளின் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி பாலாலய திருப்பணி துவங்கப்பட்டது. தொழிலதிபர்கள் சக்தி, தியாகராஜன், செல்வராஜ், கண்ணப்பன், சாந்திபால், ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.