திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரியில் உள்ள துர்க்காம்பிகா தேவஸ்தானம் சார்பில் சனிப்பெயர்ச்சியை ஒட்டி நாளை காலை 4 மணிக்கு கணபதி, நவக்கிரகம், சுதர்சனம் மற்றும் சிறப்பு ஹோமங்களும், அர்ச்சனையும் நடக்கிறது. இங்குள்ள சனீஸ்வரரை, மனைவி நீலாதேவியுடன் தரிசிக்கலாம். மேலும், இக்கோயிலில் உள்ள கிருஷ்ணர், தனது தங்கை துர்க்காதேவியுடன் ஒரே சன்னதியில் இருப்பதும் சிறப்பம்சம்.