Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மறக்கக்கூடாத வசனம்! பாசமலர்களின் வாசத் திருவிழா!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வம்பர்களிடம் நமக்கென்ன வேலை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2014
01:12

வம்புக்காரர்களிடம் வாக்குவாதம் செய்யாமல், விலகிச் செல்வதே நல்லது என்கிறது பைபிள்.ஒரு ஆட்டுக்குட்டி, தன் தாயைப் பிரிந்து காட்டில் வழிதெரியாமல் போய்விட்டது. கடும் களைப்பால் தாகம் மேலிட, ஒரு ஆற்றில் இறங்கி தண்ணீர் குடித்தது. அப்போது ஒரு ஓநாய், ஏய் ஆடே! ஏன் தண்ணீரை கலக்குகிறாய்? என்றது.  வம்புக்கார ஓநாய் தன்னை அடித்து தின்னவே வந்துள்ளது என்பதைப் புரிந்து கொண்ட ஆட்டுக்குட்டி, நீ அந்தப் பக்கமாக நின்று தானே தண்ணீர் குடிக்கிறாய்? நீ குடித்த தண்ணீரின் மிச்சம் தானே நான் நிற்கும் இடத்திற்கு வருகிறது? அப்படியிருக்க, நான் தண்ணீரைக் கலக்குவதாக சொல்கிறாயே? என்றது.அதெல்லாம் இல்லை. நீ எங்கு நின்றாலும், தண்ணீரைக் கலக்கத்தான் செய்கிறாய், என்ற ஓநாய், ஐயையோ! இங்கே நான் சாப்பிட வளர்த்திருந்த புல்லைத் தின்று விட்டாயா? என்று கத்தியது.நீ புல் சாப்பிடமாட்டாயே. அது எங்கள் உணவல்லவா? நீ இறைச்சி சாப்பிடுபவன் ஆயிற்றே, என்று பயத்துடனும் பணிவுடனும் கேட்டது. உடன் ஓநாய், சரியாகச் சொன்னாய். இதோ பார்! உன்னை அடித்து சாப்பிடுகிறேன், என்று பாயவும், ஒரு அம்பு ஓநாயின் மீது தைக்கவும் சரியாக இருந்தது. அது அலறியபடியே உயிரை விட்டது. ஆட்டின் சொந்தக்காரன், ஆட்டைத் தேடி அங்கு வர, ஓநாய் அதன் மீது பாய்வதைப் பார்த்து, அம்பெய்து அதைக் கொன்று விட்டான். ஓநாயிடம் நெருங்கிச் சென்று வாக்குவாதம் செய்திருந்தால் ஆடு மடிந்திருக்கும். ஒதுங்கிப் போனதால் அது உயிர் தப்பியது. வாக்குவாதம் செய்ய வேண்டாம், அதனால், கேட்கிறவர்களின் புத்தி தடுமாறுமே ஒழிய ஒரு பலனுமில்லை, என்ற பைபிள் வசனத்தை நினைவில் கொள்ளுங்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கொடிமரத்தின் முன்பாக மட்டும் வணங்கலாம். ... மேலும்
 
மிகவும் நல்லது. நல்ல சகுனம். ... மேலும்
 
கன்றுடன் கூடிய பசுவாக இருந்தால் பூஜை ... மேலும்
 
பிதுர் தோஷம் நீங்க ராமேஸ்வரத்தில் தில(எள்) ஹோமம் செய்யுங்கள். ... மேலும்
 
தினமும் கந்தசஷ்டி கவசத்தை பாட நல்லது நடக்கும்.   ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar