சபரிமலை கோவில் நடை திறப்பு: 15ம் தேதி (சித்திரை 2ல்) அதிகாலை விஷு கனி தரிசனம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2026 11:04
சபரிமலை : சித்திரை மாத பூஜை, விஷு கனி தரிசனத்திற்காக சபரிமலை கோவில் நடை இன்று ஏப்., 11 மாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்டது. வழக்கமாக சித்திரை ஒன்றாம் தேதி விஷு கனி தரிசனம் நடைபெறும். ஆனால், இந்தாண்டு சில சாஸ்திர கணக்குகளின் படி, சித்திரை 2ம் தேதி அதிகாலை விஷு கனி தரிசனம் நடைபெறும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது. வரும், 15-ம் தேதி அதிகாலையில், சூரியன் பங்குனி மாதத்தில் இருந்து சித்திரை மாதத்துக்கு கடப்பதால் விஷு அன்றைய தேதிக்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்படி ஏப்., 15ம் தேதி அதிகாலை விஷு கனி தரிசனம் நடைபெறும். ஏப்., 12 முதல் 18ம் தேதி வரை அனைத்து நாட்களிலும் நெய்யபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும்.