Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செம்மேடு காசிவிஸ்வநாதர், ... வரதராஜப் பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் வரதராஜப் பெருமாள் கோவிலில் ஊஞ்சல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமபத விளையாட்டு வாயிலாக பக்தர்களிடம் தேர்தல் விழிப்புணர்வு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமபத விளையாட்டு வாயிலாக பக்தர்களிடம் தேர்தல் விழிப்புணர்வு

பதிவு செய்த நாள்

12 ஏப்
2026
09:04

திருப்பூர்: பாம்பு, ஏணிகளுடன் இருக்கும் பரமபத விளையாட்டின் வாயிலாக, தேர்தல் விதிமுறைகள் மற்றும் விதிமீறல்கள் குறித்து, கோவிலுக்கு வந்த பக்தர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தேர்தல் கமிஷன், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் விழிப்புணர்வில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.

திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் வளாகத்தில், கோவிலுக்கு வந்த பக்தர்களை, பரமபதம் விளையாட வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பெரிய பரமபத கட்டம் வரைந்த பேனரை தரையில் விரித்து, பக்தர்கள் விளையாடினர். ஒருவர் தாயக்கட்டையை உருட்ட, அதில் வரும் எண்ணுக்கு, மற்றவர்கள் பரமபத கட்டத்தில் நகர்ந்து சென்றனர்.

வரும், 23ம் தேதி ஓட்டுப்பதிவு, மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை, வாக்காளரின் உரிமை, ‘பூத் சிலிப்’ மற்றும் வாக்காளர் அடையாள அட்டை; ஓட்டளிக்க கொண்டு செல்ல வேண்டிய ஆவணம், இடது ஆட்காட்டி விரலில் மை வைப்பது, வாக்காளரின் பொறுப்புகள் ஆகிய தேர்தல் விதிமுறைகள் இருந்த கட்டங்களில், ஏணி இருந்தது.

ஓட்டளிக்க பணம் வாங்க கூடாது; வெளிப்படையாக ஓட்டளிப்பதை கூறக்கூடாது; ஓட்டுச்சாவடிக்குள் மொபைல் போன் கொண்டு செல்லக்கூடாது போன்ற விதிமீறல் இருந்த கட்டங்களில் பாம்பு இருந்தது.

அதாவது, தேர்தல் விதிமுறைகளை சரிவர பின்பற்றினால், ஏணியில் உயர்வு கிடைக்கும்; தாங்கள் விரும்பும் வேட்பாளரை வெற்றி பெற செய்யலாம்.

விதிமீறல்கள் நிகழ்ந்தால், பாம்பு கடித்து சறுக்கி வருவது போல், பின்னடைவு ஏற்படும் என்று, பக்தர்களுக்கு, நுாதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 
temple news
 கோவை: கோட்டைமேடு பகுதியிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar