பதிவு செய்த நாள்
12
ஏப்
2026
09:04
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த செம்மேடு காசிவிஸ்வநாதர் மற்றும் வரதராஜபெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.
பண்ருட்டி அடுத்த செம்மேடு கிராமத்தில் உள்ள காசி விஸ்வநாத சுவாமி கோவில் மற்றும் வரதராஜபெருமாள் கோவில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது. காசி விஸ்வநாதசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 9ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் காலை சிறப்பு பூஜை, மாலையில் முதல் கால யாக சாலை பூஜை நடந்தது. நேற்று காலை 2ம் கால பூஜை, மாலை 6:00 மணிக்கு 3 ம் கால பூஜை நடந்தது. இன்று 12ம் தேதி காலை 6:00 மணிக்கு, 4ம் கால பூஜை, காலை 9:30 மணிக்கு மகாகும்பாபிஷேகம் நடக்கிறது.
வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் பகவத் பூஜையுடன் துவங்கியது. அதனை தொடர்ந்து, முதல் கால யாகவேள்வி, பூர்ணாஹூதி நடந்தது . நேற்று காலை 7:30 மணிக்கு அக்னி ஆராதனம், கும்ப பூஜை, 2ம் கால யாக வேள்வி பூர்ணஹூதி, சாற்றுமுறை, மாலை 3ம் கால யாகவேள்வி, சிறப்பு பக்தி இசை ஹைதராபாத் டாக்டர் சிவா சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
இன்று 12 ம் தேதி காலை கோ பூஜை, சுப்ரபாதம், அக்னி ஆராதனை, 4ம் கால யாகவேள்வி முடிந்து, காலை 9:00 மணிக்கு கடம்புறப்பாடாகி மகா சம்ப்ரோஷணம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை பஞ்சவடீ ஆஞ்சநேய கோவில் செயலாளர் நரசிம்மன், கோவில் செயல்அலுவலர் சரவணரூபன், தக்கார் வசந்தம் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.