இது கன்னி ஐயப்பன்மார்களுக்கு (முதன் முதலாக மாலையணிந்து சபரிமலை வருபவர்கள்) ஒரு புனிதமான இடமாகும். இங்கு கன்னிச்சாமிகள், எருமேலியில் பேட்டை துள்ளிவிட்டு கொண்டு வரும் மரத்திலான சரக்கோல்களை போட்டு வழிபடுகின்றனர். எந்த வருஷம் கன்னிச்சாமி யாருமே இங்கு வரவில்லையோ, அப்போது உன்னைக் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று மாளிகைப்புறத்தம்மனுக்கு ஐயப்பன் வாக்குத் தந்துள்ளார். அந்த அம்மன் இங்கே வந்துதான் சரங்களைப் பார்வையிடுவாள். சரங்குத்தி தாண்டியவுடனேயே ஐயப்பனின் தங்க கோயில் கண்ணில் படும். சுவாமியே சரணம் ஐயப்பா என்று பக்தர்கள் முழங்கும் சரண கோஷம் விண்ணைப் பிளக்கும்.