கோயிலை அடைந்ததும் முதலில் தரிசிப்பது 18 படிகள். ஏகாக்ஷரம் என்பது ஹ்ரீம் என்கிற புவனேஸ்வரி மந்திரம். அக்ஷாடாக்ஷரம் என்பது விஷ்ணுவினுடையது. சிவ சக்தியுடன் கலந்த விஷ்ணு சக்தியே இந்த பதினெட்டு படிகள். இந்து கலாசாரத்தில் 18க்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. பதினெட்டு புராணங்கள், பகவத்கீதையில் 18 அத்தியாயங்கள் என்று உள்ளதைக் காணலாம். அது மட்டுமல்ல! எங்கெங்கு காவல் தெய்வங்கள் உள்ளதோ, அங்கே பதினெட்டுபடி அமைப்பது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. இங்கே ஐயப்பன் மட்டுமல்ல, 18 படிகள் ஏறும் முன்பு இருபுறமும் உள்ள கடுத்தசுவாமி, கருப்பசுவாமி ஆகிய காவல் தெய்வங்களையும் தரிசிக்கலாம்.