Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாளிகைப்புறம் சந்நிதி! அனைவருக்காகவும் பிரார்த்திப்போம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தேவன் எழுதிய அன்புக் கடிதம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2014
05:12

ஒரு மாணவன்ஆலயத்திற்கு  போகும் போதெல்லாம் தன்னுடைய புது பைபிளைக் கொண்டு செல்வான். ஆனால், ஒருநாளும் அதை திறக்கவே மாட்டான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த சபை போதகர் ஒருநாள் அவனை அழைத்து, நீ சபைக்கு வரும் போது பைபிளைக் கொண்டு வருகிறாய். ஆனால், ஒருமுறை கூட ஏன் திறந்து வாசிப்பதில்லை, என்று கேட்டார். இம்மாணவன் போதகரிடம், ஐயா! தினமும் திறந்தால் இது அழுக்காகி விடும் என்றான்.அவனுக்கு உண்மை நிலையைப் புகட்ட நினைத்த போதகர், அவன் அன்று புதிதாக அணிந்திருந்த செருப்பைப் பார்த்தார். உடனே அவனிடம், இனி ஒருநாளும் இந்த செருப்பை போடக் கூடாது. அழகான இந்த செருப்பில் மண் ஒட்டிக் கொள்ளும், என்றார். மாணவனோ, ஐயா! செருப்பை மண்ணில் போட்டுக் கொள்ளத் தானே வைத்திருக்கிறோம். எவ்வளவு ரூபாய்க்கு வாங்கினாலும், அதில் எப்படியாகிலும் மண் ஒட்டத்தானே செய்யும். செருப்பு போடவில்லை என்றால் நமது கால்களுக்குத் தானே பாதுகாப்பு இல்லாமல் போய் விடும் என்றான்.போதகர் சிரித்தபடி, நீ செருப்பு போடாவிட்டால் கால்களுக்கு மட்டுமே பாதுகாப்பில்லை. பைபிளை வாங்கி புத்தம் புதிதாக வைத்திருந்தால் உன் வாழ்வுக்கே பாதுகாப்பு இல்லை. வாசிப்பதற்காகத் தான் தேவன் நமக்கு எழுதி வைத்துள்ளார். வேதத்தை வாசித்து அந்த வசனங்களை நீ இருதயத்தில் வைத்துக் கொள். அதை அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க முயற்சி செய். அதுவே வாழ்க்கை முழுவதற்கும் பாதுகாப்பு என்று சொல்லி அனுப்பி வைத்தார்.இதைப் போல பலர் வீடுகளில் வேதத்தை வாங்கி வைக்கின்றனர். அலங்காரப் பொருள்போல அதுவும் ஒரு இடத்தை அடைத்துக் கொண்டிருப்பதை பார்த்திருக்கலாம். ஆனால், எத்தனை பேர் இருதயத்தில் பைபிள் வசனத்தை வைத்திருக்கிறார்கள் என்று ஆய்வு செய்தால் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. நாம் வேத வசனத்தைப் பின்பற்றி நடந்தால் மட்டுமே பரலோகம் செல்ல முடியும். கர்த்தருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் என்று வேதம் சொல்கிறது(சங்.1:2) உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு என் கண்களைத் திறந்தருளும்(சங்.119:18) என்று சொல்லி ஜெபியுங்கள். வேதம் தேவனால் நமக்கு எழுதப்பட்ட அன்பின் கடிதம். வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் கர்த்தருடைய வார்த்தை ஒழிந்து போகாது. அப்படிப்பட்ட வேதத்தை அன்றாடம் எடுத்து வாசிக்க ஆரம்பியுங்கள். கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிப்பிக்கிறதுமாய் இருக்கிறது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar