Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தன்வந்திரிக்கு கோயில்கள்! மார்கழி வந்தாச்சு!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பெரியவரின் பாதுகை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2014
03:12

காஞ்சி மடத்தில் ஏகமான கூட்டம் பெரியவரைத் தரிசிக்க காத்திருந்தது. வரிசையில் நின்று கொண்டிருந்த பக்தர்களின் மத்தியில் ராமலிங்க பட் என்பவரும் இருந்தார். அவரது கையில் பட்டுத்துணி போர்த்திய தட்டு இருந்தது. அருகில் வேதமூர்த்தி என்பவர் நின்று கொண்டிருந்தார்.அவர் ராமலிங்க பட்டிடம்,“தட்டில் என்ன வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.“ஓரிக்கையில்(காஞ்சிபுரம் அருகிலுள்ள கிராமம்) மகாபெரியவருக்கு மணிமண்டபம் கட்டுகிறார்கள் இல்லையா! அங்கே பிரதிஷ்டை செய்வதற்கு ஒரு ஜோடி பாதுகையும், என் வீட்டு பூஜையறையில் வைக்க ஒரு ஜோடி பாதுகையும் தயார் செய்து கொண்டு வந்துள்ளேன். அது மட்டுமல்ல! என் தாயார் சுமங்கலியாக காலமாகி விட்டார். அவர் காலமெல்லாம் அணிந்திருந்த எட்டுபவுன் தங்கச் சங்கிலியையும் மணி மண்டப கட்டுமானப் பணிக்கு கொடுப்பதற்காக வைத்துள்ளேன்,” என்றார்.வேதமூர்த்தி அவரிடம்,“அதெல்லாம் சரி! பாதுகைகளைச் செய்வதாக இருந்தால், மணிமண்டபம் டிரஸ்டிகளிடம் அனுமதி பெற்றிருந்தீர்களா?” என்றதும், ‘பட்’டுக்கு yக்கி வாரிப் போட்டது.“இப்படி ஒரு விஷயம் இருக்கிறதா! இது எனக்கு தெரியாதே! மைமூரிலே நல்ல சந்தனக்கட்டை வாங்கி, சுத்த பத்தமாக இருந்து சிறந்த தச்சரைக் கொண்டு செய்து வந்துள்ளேன்.  இப்போது என்ன செய்வது?” என்று கலங்கிய நிலையில் வரிசையில் நின்றார் பட்.அவரிடம் “கவலைப்படாதீர்கள்,” என்று ஆறுதல் சொன்ன வேதமூர்த்தி, பெரியவருக்கு கைங்கர்யம் செய்து கொண்டிருந்த ஒருவரை அழைத்தார். அவருக்கு வெண்கலக்குரல். மெதுவாகவே பேச வராது. அவரிடம் விஷயத்தைச் சொன்னதும், அவரும்  பெரியவரிடம் போய் சொல்லி விட்டார். பிறகு வெளியே வந்தவர், தனக்கே உரித்தான உரத்த குரலில், “எல்லோரும் அமைதியாக இருங்கோ! ஒரு அறிவிப்பு வெளியிடப் போறேன்! மணிமண்டபத்தில் பிரதிஷ்டை செய்ய ஒரு ஜோடி பாதுகையை ராமலிங்க பட் என்பவர் கொண்டு வந்துள்ளார். அத்துடன் அவரது தாயாரின் நகையும் எடுத்து வந்துள்ளார். இது எல்லாத்தையும் பெரியவரின் சந்நிதியில் சமர்ப்பிக்கிறேன்,” என்றவாறே, அவற்றை  வாங்கி பெரியவரிடம் ஒப்படைத்தார்.பெரியவர் ராமலிங்க பட்டை முன்னால் வருமாறு அழைத்தார். அன்று உண்மையிலேயே பெரியவருக்கு உடல் நலமில்லை. ஆனால், திடீர் உற்சாகத்துடன் அந்த செயினை எடுத்து தன் வயிற்றின் மேல் வைத்து குழந்தை போல பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு ஜோடி பாதுகைகளை தன் பாதங்களில் அணிந்து கொண்டார். பிறகு இடது காலை yக்கி வலது தொடை மேலாகவும், வலது காலைத் yக்கி இடது தொடை மேலாகவும் போட்டு நடராஜரின் திருநடனம் போல காட்சி கொடுத்தார். இப்படியே நான்கு முறை கால்களை மாற்றிக் கொண்டார். பிறகு இன்னொரு ஜோடி பாதுகையைப் போட்டுக் கொண்டு கழற்றிக் கொடுத்து விட்டார்.பெரியவர் நான்குமுறை அணிந்து கொண்ட அந்த பாதுகை தான், இப்போது ஓரிக்கை மணிமண்டபத்தில் நமக்கு காட்சி தந்து கொண்டிருக்கிறது.  (மகான் காஞ்சிப் பெரியவர்)

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar