பதிவு செய்த நாள்
11
டிச
2014
11:12
மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், தைப்பூச சக்தி மாலை இருமுடி விழா, நேற்று துவங்கியது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், இந்த ஆண்டு, தைப்பூச சக்தி மாலை, இருமுடி விழா நேற்று, துவங்கி, வரும், பிப்., 2ம் தேதி வரை நடைபெறுகிறது. அதை முன்னிட்டு, நேற்று, அதிகாலை 5:00 மணிக்கு, இருமுடி விழா துவங்கியது.தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.