பதிவு செய்த நாள்
11
டிச
2014
01:12
அரியலூர்:அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரில் அருந்தவநாயகி சமேத ஆலந்துறையார் சிவன் கோவில் உள்ளது.தேவாரம் பாடல் பெற்ற காவிரியின் வடகரை தலங்களுள், 55வது தலமாக போற்றப்படும் இக்கோவில், நூற்றாண்டுகள் பழமையானது. இத்தலத்தில், இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். வரலாறு மற்றும் புராண பெருமை மிக்க இக்கோவில் ராஜகோபுரம், ஸ்வாமி, அம்பாள், விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, துர்க்கை உள்பட கோவில் பிரகாரத்தில் உள்ள தெய்வங்களின் கோபுரங்களுக்கு, திருஞானசம்பந்தர் வாரவழிபாட்டு அறக்கட்டளை மற்றும் பக்த பிரமுகர்கள் நிதி உதவியுடன் திருப்பணி செய்யப்பட்டது.கடந்த, 8ம் தேதி முதல், நடந்த யாகசாலை பூஜைகளை தொடர்ந்து, நேற்று காலை, 11.25 மணிக்கு, ராஜகோபுரம், மூலவர், அம்பாள் உள்பட அனைத்து கோபுரங்களுக்கு, சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.கும்பாபிஷேக விழாவில், தமிழக அரசின் ஹிந்து சமய அறநிலைய ஆட்சித்துறை இணை ஆணையர் கல்யாணி, அரியலூர் உதவி ஆணையர் கோதண்டராமன், நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் பக்தர்கள் பங்கேற்றனர்.