மங்கலம்பேட்டை: முகாசபரூரில் கோரக்க சித்தர் குருபூஜை விழா நாளை (11ம் தேதி) நடக் கிறது. மங்கலம்பேட்டை அடுத்த முகாசபரூர் அன்னபூ ரணி உடனுறை விஸ்வநாதர் கோவிலில் மகான் கோரக்க சித்தர் குருபூஜை விழா நாளை (11ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, காலை 10:00 மணிக்கு மகாவேள்வி, பகல் 11:00 மணிக்கு குருபூஜை, சங்கு அபிஷேகம், பகல் 12:00 மணிக்கு அன்னதான நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவில் அமைச்சர் சம்பத் பங்கேற்கிறார்.