எங்கே இருக்கிறது?: தென்சென்னையில் இருக்கிறது வடபழனி. இங்கு வடபழனி ஆண்டவர் கோயில் வெகு பிரசித்தம். இந்தக் கோயிலுக்கு அருகே-இரண்டு தெருக்கள் தள்ளி-நெற்குன்றம் பாதையில்-வடபழனி ஆண்டவர் திருக்கோயிலுக்குச் சொந்தமான வள்ளி திருமண மண்டபத்தின் அருகே சித்தர்கள் சமாதித் திருக்கோயில் அமைந்துள்ளது.
எப்படிப் போவது?: சென்னை நகரத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் வடபழனியை அடைவதற்குப் போக்குவரத்து வசதிகள் நிறையவே உண்டு. தாம்பரம்-கடற்கரை மின்ரயில் மார்க்கத்தில் பயணிப்பவர்கள் கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் இறங்கிக் கொண்டு, அங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள வடபழனிக்கு நகரப் பேருந்து மூலமோ ஆட்டோ மூலமோ அடைவது எளிது. தாம்பரம்-கோயம்பேடு செல்லும் வடபழனி நூறடி சாலையில் வடபழனி சிக்னலைத் தாண்டி வலப் பக்கம் நெற்குன்றம் பாதை என்கிற சிறுசாலை திரும்பும். அங்குதான், இந்த சமாதித் திருக்கோயில் அமைந்துள்ளது.
தொடர்புக்கு: துணை ஆணையர்/செயல் அலுவலர் வடபழனி ஆண்டவர் திருக்கோயில். வடபழனி. சென்னை-600026. போன்:044-24836903.