திருப்புத்தூர் : திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிச.21 முதல் பகல் பத்து உற்சவம் துவங்குகிறது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இக்கோயில் பரமபத வாசல் ஜன.1 அன்று இரவு திறக்கப்படும். அதை முன்னிட்டு டிச.,21ல் பகல்பத்து உற்சவம் துவங்கும்.அன்று காலை 10 மணிக்கு ஆண்டாள் சன்னதியில் பெருமாள் எழுந்தருள்வார். சுவாமிக்கு சிறப்பு பூஜை, ஆராதனை நடக்கும். தினமும் பெருமாள் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கும். டிச.31ல் திருமங்கையாழ்வார் திருவடித் தொழுதலும், ஜன.1 அன்று இரவு 10 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவியருடன் சவுமிய நாராயண பெருமாள் ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருள்வார். பின் தாயார் சன்னதி எழுந்தருளி சிறப்பு பூஜை, ஆராதனை நடக்கும். ஜன.2 முதல் இரவு பத்து துவங்கும். தினமும் இரவு 7 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்படும். ஜன.8ல் கல்லறை கட்டி அடித்தல், ஜன.,10ல் நம்மாழ்வார் திருவடி தொழுதல் நடைபெறும். கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.