திருப்புத்தூர் : திருப்புத்தூர் தர்மசாஸ்தா ஆலயத்தில் மகரஜோதி யாத்திரை விழாவை முன்னிட்டு நாளை லட்சார்ச்னை துவங்குகிறது. டிச.16 அன்று காலை 7 மணிக்கு கணபதிஹோமம், சாஸ்தா ஹோமம் நடக்கும். தொடர்ந்து காலை 10.45 மணிக்கு லட்சார்ச்னை நடக்கும். அய்யப்ப சேவா சங்க தலைவர் நா.ராமேஸ்வரன் துவக்கி வைக்கிறார். தினமும் லட்சார்ச்னை நடக்கும். டிச.27ல் மண்டலாபிசேக ஆராதனை, சுவாமி திருவீதி உலா, ஜன.,3ல் லட்சார்சனை பூர்த்தியாகும். ஜன.12ல் இருமுடி கட்டுதலுடன் பக்தர்கள் மகரஜோதி தரிசன பயணம் துவங்கப்படும்.