மதுரை நன்மை தருவார் கோயிலில் சனிப்பெயர்ச்சி யாகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16டிச 2014 04:12
மதுரை: சனி பகவான் இன்று (16.12.14)மதியம் 2.45 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியானார். 2017 டிசம்பர் வரை அதே ராசியில் இருக்கிறார்.
இந்த சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு உலக நலனுக்காக மதுரை மேலமாசி வீதி இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் குருவுதாசன் எஸ். தர்மராஜ் சிவம் அவர்கள் தலைமையில் 8 சிவாச்சாரியார்களால் சிறப்பு யாகம் நடந்தது. காலை 11 மணிக்கு யாகம் தொடங்கி மதியம் 1.45 மணிக்கு பூர்ணாகுதி செய்யப்பட்டது. 2.15 மணிக்கு யாகத்திலிருந்து கலசம் புறப்பாடாகி 2.30 மணிக்கு சனிபகவானுக்கு கலசாபிஷேகமும், தொடர்ந்து பால், தயிர், பன்னீர், சந்தனம் போன்ற 9 வகையான சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டது. யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இக்கோயில் சிவகங்கை சமஸ்தானம் ராணி டி.எஸ்.கே. மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்திற்குட்பட்டது.