Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மார்கழிப்பூவே! மார்கழிப்பூவே! நல்லதை மட்டுமே நினைப்போம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மார்கழி நாயகியே உன் மலர் திருவடியை எப்போது தரிசிப்போம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 டிச
2014
06:12

நெஞ்சமே! நான் சொல்வதைக் கேட்பாயாக. ஆண்டாள் நாச்சியார் முன்செய்த தீவினைகளைப் போக்கி நம்மைக் காத்திடுவாள். மேலான இன்பமான மோட்ச கதியளித்து நம்மைக் கரை சேர்ப்பாள். இனிமையும், நன்மையும் தரும் நல்வாக்கினைத் தந்து உயர்வளிப்பாள். திருப்பாவை பாடிய செல்வ மகளான ஆண்டாளின் சிவந்த திருவடிகளை தினமும் வணங்குவோமாக.  ஆண்டாளின் திருவடிகளைச் சரணடைந்து விட்டால் வேறு வழிபாடு ஏதும் செய்ய வேண்டாம். பிரம்மன் உள்ளிட்ட தேவர்கள், முனிவர்கள், தெய்வங்கள் யாவரும் வணங்கும் வைகுண்டப்பெருமான் மீது பாசுரம் பாடிய அந்த உத்தமியைச் சரணடையுங்கள். பெரியாழ்வாரின் பிரியமான புத்திரியும், ஹரி நாமத்திலே லயித்து, அவன் திருவடிக்கே பக்தி செய்தவளும், மூவுலகங்களும் போற்றும் ஸ்ரீவில்லிபுத்துõரில் வீற்றிருப்பவளுமான கோதை நாயகியின் பாதார விந்தங்களைப் பற்றிக் கொள்வோமாக. உலகம் தழைத்தோங்க  அவதரித்தவளே! ஹரி நாம சங்கீர்த்தனமே தன் ஜீவனாகக் கொண்டவளே! ஸ்ரீரங்கநாயகனுக்கு உகப்புடன் மாலை அளித்த செல்வப்பெருமாட்டியே! என்று சொல்லி வழிபட்டு ஆண்டாளின் பாதத்தை அடைக்கலம் புகுந்திடு வோமாக. ஆண்டாளைப் போல யாரையேனும் உலகில் பார்த்ததுண்டா? மங்கள வாழ்வு அருளும் திருவடிவம் கொண்டவள் அவள். பாவை பாடிய சுடர்க்கொடி. ஆயர்பாடி ஆய்ச்சியர் ஈடேற்றம் பெற வந்த மாதவச்செல்வி. அவளது பாதங்களைச் சரணடைவோம். சேலைகளைத் திருடியவனும், புன்னை மரத்தில் ஒளிந்தவனுமான கண்ணனைப் பாடியவளே! நடனகோபாலன் என்னும் குடக்கூத்தாடும் திருமாலைச் சரணடைந்தவளே! கோபியர் மனக்குறை தீர்த்த கிருஷ்ணனை மனதில் பதித்தவளே! உன் செந்தாமரைப் பாதங்கள் எங்களுக்கு அடைக்கலமாகட்டும். கண்ணனின் திருக்கரம் பற்றியவளும், அவனை மணக்க கனா கண்டு பாசுரம் பாடியவளுமான ஆண்டாளே! உனது கருணையை நாங்கள் எப்போது பெறுவோமோ? புண்ணியம் மிகுந்த திவ்யதேசமான ஸ்ரீவில்லிபுத்துõரை நாங்கள் சென்று சேர்வது எப்போதோ?  அச்சுதனும், அனந்தனுமான கண்ணன் மீது ஆசை வைத்த ஆண்டாளின் திருவடிகளை எங்கள் தலையில் ஏற்பது எப்போதோ? மூவுலகம் போற்றும் ஸ்ரீவில்லிபுத்துõருக்கு முடிவாகச் சென்று சேவிப்பது எப்போதோ? துளசிவனத்தில் அவதரித்து, உலகம் ஆண்ட ஆண்டாளே! உனக்கு தொண்டு புரியும் பாக்கியம் எப்போது கிடைக்குமோ? நீர்வளம் மிக்க முக்குளம் நிறைந்த ஸ்ரீவில்லிபுத்துõர் திருத்தலத்தை, எங்கள் உள்ளம் மகிழ அடைவது எப்போதோ? அன்னம் போல நடைபயிலும்  ஆண்டாளின் திருவடியின் கீழ் வாழும் பாக்கியம் எப்போது எங்களுக்கு கிடைக்குமோ? அன்னவயல் என்றும், புதுவை நகரம் என்றும் சொல்லப்படும் ஸ்ரீவில்லிபுத்துõரைச் சென்று சேரும் பாக்கியம் எங்களுக்கு எப்போது கிடைக்குமோ?ஆடிப்பூரத்தில் அவதரித் தவளே!  குயில் போல் பாசுரம் பாடியவளே! குலமாதர் குணம் காக்கும் கோதை ஆண்டாளே! உனக்கு பணி செய்யும் பாக்கியம் எப்போது கிடைக்கும்? கண்கள் குளிரும்படி ஸ்ரீவில்லிபுத்துõர் நாயகியான உன்னைக் காணும் பேறு எப்போது வாய்க்கும்? தாயே! உன்னை வேண்டி நிற்கும் எங்களுக்கு விரைந்து அருள் புரிய வேண்டும்.

(மகான் நடனகோபாலநாயகி சுவாமி)

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar