Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அச்சன்கோயில் ஆபரணப்பெட்டிக்கு ... தர்ம முனீஸ்வரர் கோயிலில் மார்கழி பூஜை! தர்ம முனீஸ்வரர் கோயிலில் மார்கழி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிறிஸ்துமஸ் கால சிந்தனை: உள்ளத்தில் தூய்மை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 டிச
2014
12:12

தான் சார்ந்திருக்கும் தொழிலில் முன்னேறுபவரைக் கண்டு உடனிருப்பவர்கள் பொறாமை கொள்வது இயற்கை. அவரது பணியில் குறை கண்டுபிடித்து வீழ்த்த முயற்சிப்பர். இயேசு, கப்பர்நாகுமில் உள்ள ஒரு பிரமுகர் வீட்டிற்குச் சென்றார். அவரைக் காண ஏராளமானோர் குவிந்தனர். நோய்களை குணமாக்கும் அற்புத ஆற்றல் இயேசுவிடம் உள்ளது என்பதை எளியவர்கள் உணர்ந்திருந்தனர். பக்கவாதநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை அவரது உறவினர்கள் கட்டிலோடு தூக்கி வந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் இயேசுவின் அருகில் அவர்களால் செல்ல முடியவில்லை. இதனால், வீட்டின் மேற்கூரையில் ஏறி, ஓடுகளைப் பிரித்து, கயிற்றில் கட்டிலை கட்டி இயேசுவின் முன்பாக நோயாளியை கீழே இறக்கினர். அவர்களின் விசுவாசத்தைக் கண்ட இயேசு, அந்த நோயாளியை பார்த்து, உனது பாவங்கள் மன்னிக்கப்பட்டன, என்றார். அங்கிருந்த மத குருக்கள், பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் கடவுளுக்கு மட்டுமே உள்ளது. தன்னுடைய செயலால் கடவுளை இவர் பழிக்கிறார், என முணுமுணுத்தனர். அவர்களை பார்த்த இயேசு,"எதிர்மறையான எண்ணங்களை எதற்காக மனதில் வளர்த்துக் கொள்கிறீர்கள். பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் கடவுளின் மகனுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்,” என்றார். அந்த நோயாளியிடம், "எழுந்து உன் கட்டிலை எடுத்துக்கொண்டு வெளியே போ,” என்றார். அந்த நிமிடமே அவர் குணமடைந்து வெளியே சென்றார். உள்ளத்தில் உள்ள பாவகறைகளை நீக்கிவிட்டால், உடல் மட்டுமல்ல. நம் எண்ணங்களும் தூய்மையானதாக இருக்கும் என்பதை இந்த சம்பவத்திலிருந்து உணர்ந்து கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar