பழநி : சனிபெயர்ச்சியை முன்னிட்டு பழநி திருஆவினன்குடிகோயில், பெரியநாயகியம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று சனிபெயர்ச்சி விழாவை முன்னிட்டு பழநி திருஆவினன்குடியில் உள்ள சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனைகள் நடந்தது. வெள்ளிக்கவசம் அணிந்து சர்வ அலங்காரத்தில் சனீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் எள் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். பழநி பெரியநாயகியம்மன் கோயில், பெரியாவுடையார் கோயில்களில் சனி பகவானுக்கு சிறப்புபூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.