பதிவு செய்த நாள்
17
டிச
2014
02:12
கோபி : கோபி, பச்சமலை முருகன் கோவிலில், சனிப்பெயர்ச்சி விழா கோலாகலமாக, நேற்று நடந்தது.நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நேற்று மாலை, 5 மணி வரை, 8,250 பேர், தலா 20 ரூபாய் வீதம், 1.65 லட்சம் ரூபாய் செலுத்தி, சனிப்பெயர்ச்சி சிறப்பு அர்ச்சனை செய்துள்ளனர். கடந்தாண்டு சனிப்பெயர்ச்சியின் போது, இக்கோவிலில், 1.40 லட்சத்துக்கு அர்ச்சனை டிக்கெட் விற்பனை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இதேபோல், பவளமலை முருகன் கோவிலில், நேற்று ஐந்து மணி வரை, 1,800 பேர், தலா, பத்து ரூபாய் வீதம் சிறப்பு அர்ச்சனை செய்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.