வேதாரண்யம்: வேதாரண்யம், வேதாரண்யேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு, புனித நீர் நிரப்பப்பட்ட, 1,008 சங்குகள் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் வரப்பட்டு ஸ்வாமிக்கு, 1,008 சங்காபிஷேகமும், தீபாரதனையும் நடந்தது. இது போல, வேதாரண்யம் நாகை ரஸ்தா காசிவிஸ்வநாதர் கோவில் தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், கோடியக்காடு குழகர் கோவில், அகஸ்தியம்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில், கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.