சபரிமலை: கடந்த சில நாட்களாக வெயில் வறுத்தெடுத்த சபரிமலையில் நேற்று மாலையில் சாரல்மழை பெய்தது. பொதுவாக கார்த்திகை மாத தொடக்கத்தில் சபரிமலையில் மழை பெய்யும். அதன் பின்னர் மகரவிளக்கு காலம் முடியும் வரை மழை பெய்வது இல்லை. ஆனால் இந்த சீசனில் அடிக்கடி மழை பெய்து வந்தது. நேற்று மாலை மூன்று மணி முதலே வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. ஐந்து மணி வாக்கில் மழை சாரலாக பெய்தது. இதனால் பக்தர்கள் தங்குவதற்கு ஷெட்டுகளை நோக்கி சென்றனர்.