பதிவு செய்த நாள்
22
டிச
2014
03:12
புதுச்சேரி; தேங்காய்த்திட்டு வடபத்ரகாளியம்மன் கோவிலில், ஐயப்ப சுவாமிக்கு 14ம் ஆண்டு, அன்னதான பிரபுவாக தேரில் வலம் வரும் விழா நேற்று நடந்தது. அதையொட்டி, சுவாமிக்கு, காலை சிறப்பு அபிஷேகமும், 7:00 மணிக்கு, தேங்காய்த்திட்டு வடபத்திரகாளியம்மன் கோவிலில் இருந்து யானை, குதிரைகள் முன்னே செல்ல, மங்கள வாத்தியங்கள் முழங்க ஐயப்ப சுவாமி தேரில் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. காளி கோவில் வீதி, தெற்கு வீதி, பள்ளிக்கூட வீதி, மேட்டுத்தெரு வழியாக வீதியலா நடந்தது. அதைத்தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.