மரக்காணம்: அனுமந்தை அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. மரக்காணம் ஒன்றியம் அனுமந்தை அங்காளம்மன் கோவிலில் அமாவாசை விழா நடந்தது. காலை 7 மணிக்கு விநாயகர், முருகன், நவகிரகங்கள், அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. மாலை 6 மணிக்கு அங்காளம்மன் அலங்கரிக்கப்பட்டு கோவில் வளாகத்தில் சிறப்பு யாகம் நடந்தது . இரவு 8 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். காலை 11 மணியளவில் அங்காளம்மன் ஊஞ்சலில் அலங்கரித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 12 மணிக்கு தீச்சட்டிஏந்தினர். கோவில் தர்மகர்த்தா சின்னசாமி, ஊராட்சி தலைவர் கலைவாணி ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் சத்தியா ரவிவர்மன் கலந்து கொண்டனர்.