பொதுவாக பைரவருக்கு ஆடைகள் அணிவிப்பதில்லை. ஆனால் மதுரையிலிருந்து 65கி.மீ. தொலைவில் உள்ள திருப்பத்தூரில் யோக பைரவருக்கு வெண்பட்டாடை அணிவிக்கிறார்கள். நாய் வாகனம் இல்லாத பைரவரின் உடலில் 12 ராசிகளும் ஐக்கியமாகியுள்ளதாக ஐதிகம். எனவே இவரை வழிபட்டால் கிரக தோஷங்களிலிருந்து விடுபடலாம்.