Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கேரள அச்சன்கோயிலில் தேரோட்டம்! தான்தோன்றியம்மன் கோவில் பக்தர்கள் பூ மிதித்து வழிபாடு! தான்தோன்றியம்மன் கோவில் பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நளன் கதையை கேட்டால் ஏழரை, அஷ்டம சனி விலகும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 டிச
2014
12:12

கோவை: நளன் கதையை தொடர்ந்து கேட்டால், ஏழரை, அஷ்டமம் என்று பல விதங்களில் மனிதர்களை பிடித்து ஆட்டிப்படைக்கும் சனி நம்மை விட்டு விலகும்’ என, வில்லிபாரத சொற்பொழிவில், திருச்சி கல்யாணராமன் கூறினார். ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் நடந்து வரும் மார்கழி மாத வில்லிபாரத சொற்பொழிவில், திருச்சி கல்யாணராமன் பேசியதாவது: தர்மபுத்திரர்களுக்கு, வியாச மகரிஷி நளசரித்திரம் சொன்னார். நளனை தமயந்தி மணந்து கொண்டதால், சனி பகவான் கோபித்துக்கொண்டு, ஏழரை ஆண்டுகள் நளனை பிடித்தார். இதனால், புஷ்கரனோடு சூதாடி அனைத்தையும் இழந்தான் நளன். சூதாட்டத்தில் மனைவியை, வைக்கக் கூறியபோது, ஆட்டத்தை நிறுத்து என்று நளன் கூறினார். வியாசர், தர்மபுத்திரனிடம், ’கதையை கேட்கிறாயா’ என்றார். அப்போது தருமர், ’நளனுக்கு பிடித்தது சனி; என்னை பிடித்தது சகுனி. அதனால் தான், திரவுபதியை வைத்து சூதாடினேன்; எல்லாவற்றையும் இழந்தேன்’ என்றார்.

நளன் தமயந்தியை, காட்டில் பிரிந்தான். தமயந்தியை காட்டில் வேடன் ஒருவன் துரத்தினான். தமயந்தி, அவளது கற்பினால் வேடனை தகனம் செய்தாள். நளனை கார்கோடகன் என்ற பாம்பு கடிக்க, குள்ள உருவமாக மாறினான். வாகுகன் என்ற பெயரில் அயோத்தியின் தேரோட்டியாக போனான். பிறகு தந்தை வாயிலாக நளனை கண்டுபிடிக்க, பின் தமயந்தியும், நளனும் ஒன்று கூடினர். அதன் பின் சூதாட்டத்தில் ஈடுபட்டு, மீண்டும் ஆட்சியை பிடித்தான். சனிபகவான் காட்சியளித்து, ’உனக்கு என்ன வேண்டும்?’ என, கேட்டார். ’நீங்கள் யாரை பிடித்திருக்கிறீர்களோ; அவர்கள், என்னுடைய கதையை முழுமையாக கேட்கவேண்டும். அப்போது, அவர்களை ஒன்றும் செய்யமாட்டேன் என்று வரம் கொடுங்கள்’ என்றார். சனியும், ’அப்படியே ஆகட்டும்’ என்று கூறினார். ஏழரை, அஷ்டமம் என, சனி பிடித்தவர்கள், நள சரித்திரம் கேட்டு பயனடைய வேண்டும். இவ்வாறு, திருச்சி கல்யாணராமன் பேசினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஐப்பசி தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி அல்லது ரமா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்திர ஏகாதசி விரதத்தை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: தீப திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவில் உழவார பணியில் ஒரே நாளில், 1,500 பக்தர்கள் ... மேலும்
 
temple news
பாகூர்: கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கோசாலையை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை நேரு வீதி காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூரம் ஜென்ம திருநாள் விழாவையொட்டி சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar