சென்னை வானகரத்தில் 108 திவ்ய தேச பெருமாள் கண்காட்சி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2014 02:12
வானகரம்: சென்னை வானகரத்தில், 108 திவ்ய தேச பெருமாள் கண்காட்சி நடந்து வருகிறது. மதுரவாயல் அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், 108 திவ்ய தேச பெருமாள் கண்காட்சி, நேற்று முன்தினம் துவங்கி, வரும் ஜன., 3ம் தேதி வரை நடக்கிறது. அதில், 108 பெருமாள்களையும் ஒரே இடத்தில் காணலாம். தினமும் காலை 6:00 மணி முதல், இரவு 9:00 மணி வரை, கண்காட்சி நடைபெறும். நான் பெருமாள் பக்தன். என் மூன்று மகன்களுக்கு பெருமாளின் பெயர்களை வைத்து உள்ளேன். இந்த காலத்தில், 108 திவ்ய தேசங்களையும் பார்ப்பது எங்களை போன்றவர்களுக்கு மிகவும் அரிய விஷயம். சென்னையில் இப்படி ஒரு கண்காட்சி நடப்பது மகிழ்ச்சியாக உள்ளது; குழந்தைகளுக்கு விளக்கி கூறவும் முடிகிறது. மணிகண்டன், போரூர் பகுதிவாசி.