திருப்பதியில் காலை நடை திறப்பது முதல் இரவு நடை சாற்றும் வரை நடக்கும் பூஜைகளை போல போடி ஸ்ரீ நிவாசப்பெருமாள் கோயிலில் திருமலை திருப்பதியில் ஒரு நாள் உற்சவ திருவிழா நடந்தது.
அதிகாலை விஸ்வரூபதரிசனம், கோ பூஜை, திருப்பாவை, மகா தீபாரதனையும், காலை 11 மணியளவில் ஸ்ரீதேவி, பூமிதேவியுடன் ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கல்யாணமும், சிறப்பு அலங்காரமும் நடந்தது. இதனையொட்டி ஊஞ்சல் சேவை, சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. சிறப்பு பூஜைகளை அர்ச்சகர் சீனிவாசவரத பட்டாச்சாரியார் குழுவினர் நடத்தினர். விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரம்யாசுபாசினி, திருப்பாவை மற்றும் ஏகாதசி குழுவினர் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் அருளாசி பெற்றனர்.