முருகனின் வாகனம் மயில். ஆனால் ஆடு, யானை, குதிரை வாகனங்களிலும் முருகன் சில கோயில்களில் இருக்கிறார். குதிரை மீதமர்ந்த முருகன் - மருதமலை, வேளிமலை ( கன்னியாகுமரி மாவட்டம்) ஆடு வாகன முருகன் - திருப்போரூர், மருங்கூர் (கன்னியாகுமரி மாவட்டம்) கிளி, சிங்க வாகன முருகன் - திருப்போரூர், யானை வாகன முருகன் - சுவாமிமலை, சிதம்பரம், மீன் வாகன முருகன் - காங்கேயம் ஐயப்பன் கோயில் (நின்றநிலை), நாக வாகன முருகன் - மேற்குமாம்பலம் முருகாஸ்ரமம் (நின்றநிலை).