ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு தினமும் திருஷ்டி கழிக்கப்படுகிறது. ரங்கனின் அழகைக் கண்டால் யார் தான் திருஷ்டி போட மாட்டார்கள். இறைவனை திருஷ்டியெல்லாம் அண்டாது என்றாலும் கூட, அன்பின் காரணமாக இச்சடங்கு செய்யப்படுகிறதெனச் சொல்வர். ஐந்தாவது பிரகாரத்திலுள்ள நாலுகால் மண்டபத்தில் இச்சடங்கு நடத்தப்படும். ஒரு சிறிய குடத்தின் மேல் கிண்ணம் ஒன்றை வைத்து, அதில் கனமான திரியிட்டு தீபமேற்றி பெருமாளுக்கு காட்டுவர். இந்த சடங்கிற்கு திருவந்திக்காப்பு எனப் பெயர்.