பெருமாள் இரட்டை விரல் காட்டி நிற்பது எதற்காக ? மகாபலியே, நான் இரண்டடி நிலம் அளந்து விட்டேன். மூன்றாவது அடியை எங்கே வைப்பது ? எனக் கேட்பதே இக்கோலம். எங்கிருக்கிறார் இந்த தோற்றமுள்ள பெருமாள் ? காஞ்சிபுரத்தில் உள்ள உலகளந்த பெருமாள் கோயிலில் தான் இப்படி இருக்கிறார். இரண்டு கரங்களை நீட்டி சேவை சாதிக்கும் பெருமாள் இடதுகையில் இரட்டைவிரலை உயர்த்திக் காட்டியிருக்கிறார். இந்தியாவிலேயே இத்தகைய வித்தியாசமான அமைப்பு இங்கு தான் இருப்பதாகச் சொல்கிறார்கள்.